|
|
|
இறைவனின் திவ்ய வல்லமையின் வடிவம் என போற்றப்படுபவர். எந்த காரியத்தை தொடங்கு முன்னும் விநாயக வணக்கத்துடன் தொடங்கும் போது காரியம் சித்தியாகும் என்பது நம்பிக்கை. |
|
| |
|
இவ்வாறான விநாயக பெருமான் ஆலயங்கள் ஈழத்திருநாட்டில் பெருமளவில் உள்ளன. இவ் ஆலயங்களில் ஒன்றான விளங்குவது தான் ஆனைக்கோட்டை ஸ்ரீ வரதவிநாயகர் (சம்பந்தப்பிள்ளையார்) ஆலயம். இவ் ஆலயம் ஆனைக்கோட்டையில் சங்கரப்பிள்ளை வீதியில் மூத்த விநாயகர் கோவிலிற்கு வடக்கே வரும் மானிப்பாயை இணைக்கும் வீதியில் அமைந்துள்ளது. |
|
| |
|
இவ் ஆலயம் கட்டட அமைப்பில் சிறிதாக இருந்தாலும் அதன் அருட்சிறப்பும் அற்புத சக்தியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பதை நிரூபிக்கும் ஆலயமாக விளங்குகின்றது. இங்கு மூலஸ்தானத்தில் விநாயகப் பெருமானுடன் பரிவார மூர்த்திகளாக மஹாலட்சுமி, சந்தான கோபாலர், தேவ சேனா சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரன், வைரவர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். |
|
| |
|
இங்கு தினசரி மூன்று காலப் பூசைகளும் தவறாது நடைபெற்றுவருகின்றது. வருடந்தோறும் ஆவணி மாதம் வரும் ஷஷ்டி திதியில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து தினங்கள் மஹோற்சவம் நடைபெற்று ஆவணிப் பௌர்ணமி திதியில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறுகின்றது. அதில் சப்பறம் மற்றும் தேர் தீர்த்த உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகிறன. உற்சவ காலங்களில் தினமும் அன்னதானம் நிகழ்வு இடம் பெற்று வருகின்றது. இணை விட சித்திரைப் பௌர்ணமி அன்றும் விசேட அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி உட்பட மாதம் தோறும் வருகின்ற சதுர்த்தி பூசைகள், நவராத்திரி பூசை, புரட்டாதிச் சனிஸ்வர அபிசேகம், மணவாளக் கோலம், பிள்ளையார் கதை விரதம் என்பன மிகவும் சிறப்பாக நடைபெநற்று வருகின்றது. |
|
| |
|
|
இவ் விநாயகர் ஆலயம் ஐவகை மரத்தின் கீழ் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. ஆலயத்தை சூழ நான்கு புறங்களிலும் குடிமனைகள் காணப்படுகின்றன. எந்நேரமும் குடிமக்களை கண்போல காக்கவேண்டும் என்பதற்காக ஊருக்கு நடுவிலே அமர்த்துவிட்டார்.எவ்வாறாயினும் அமைதியின் வடிவம் இறைவன் என்பதற்கிணங்க எந்நேரமும் ஆலையத்துக்குள்ளே காலடி எடுத்து வைக்கும் போது மெய்சிலிர்க்க வைக்கும் பரவச நிலையையும் அமைதியும் தானாக வந்துவிடும். |
|
|
| |
|
|
ஐவகை மர நிழலிலே அமைதியாக குடிகொண்டு அற்புதம் பல புரிந்து பக்தர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திவரும் சம்பந்தப்பிள்ளையாரின் அருட்கடாட்சம் பெற்ற பக்தர்கள் ஏராளம். எங்கிருந்து நாம் சம்பந்தப்பிள்ளையாரை நினைத்தாலும் அவர் தன்னிடமே அழைத்துவிடுவார் எம்மை. என்ன இடர் நேர்ந்தாலும் அதை விரைவாக களைத்திடுவார் எம்மிலிருந்து. |
|
|
| |
|
|
சுபம் |
|
|
|
|
|