|
|
|
|
| |
|
 |
|
இவ்வாறான அற்புதம் நிறைந்த சம்பந்தப் பிள்ளையாரின் தனிச்சிறப்பு என்னவென்றால் தன்னை வழிபட்டு தனக்கு சேவைசெய்து கொண்டிருக்கின்ற பக்தர்களை பாதியிலே நிறுத்தி வெளிநாடு சென்று அங்கு சகல ஐஸ்வர்யங்களுடன் வாழ வழி அமைத்துக் கொடுத்துவிடுவார். பல பேரை கல்வியில் உயர்த்தி உத்தியோகங்களை அளித்து செல்வந்தர்களாக வேவ்வேறு தேசங்களில் வாழவைத்துவிடுவார். இதானல் தான் விசேடமாக "வெளிநாட்டுக்கு அனுப்பும் பிள்ளையார்" என நாமம் நிலவுகிறது. சம்பந்தப் பிள்ளையாரின் அருள் பெற்ற ஆயிரம் கணக்கான பக்தர்கள் இன்று ஜரோப்பிய நாடுகளில் பல பாகங்களிலும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது இவரது தனிச் சிறப்பாகும். |
|
| |
|
 |
|
பல வருடங்களுக்கு முன்னர் இவ் ஆலயத்தினுள் திருடர்கள் புகுந்து பிள்ளையாரின் நகைகளையும் பணத்தையும் திருடும் பொருட்டு ஓடு பிரித்து கோயிலுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கு காணப்பட்ட நகைகள் காசுகள் எல்லாம் திருடர்களால் முடிச்சாக கட்டப்பட்டன. இரவு புகுந்த திருடர்களால் விடியும் வரை எவ்வளவு முயற்சி செய்தும் திருடிய முடிச்சை கொண்டு வெளியேற முடியாமல் போய்விட்டது. ஒரு சிறிய முடிச்சை கூட எடுத்து போகமுடியாமல் திருடர்கள் அப்படியே விட்டுவிட்டு தாம் மட்டும் தனியே வெளியேறிவிட்டார்கள். பிள்ளையார் செய்த அற்புதத்தை கண்டு மக்கள் நெகிழ்தனர்.
|
|
| |
|
 |
|
1989 ல் இடம் பெற்ற யுத்த சூடு பிடித்த வேலையில் கோயிலைச் சுற்றி இருந்தவர்கள் பிள்ளையாரிடம் தஞ்சம் புகுந்தனர். ஆவ்வாறிருக்கையில் ஓர்நாள் பிள்ளையாரின் சிறந்த பக்தை ஒருவர் பிள்ளையாரின் சந்நிதியில் ஓட ஓட விரட்டப்பட்டு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். மார்பினில் குண்டு பாய்ந்து இரத்தவெள்ளத்திலே மிதந்துகொண்டிருந்த வேலையில் யாவரும் உயிர் தப்பமாட்டார் என நினைத்த வேலையில் பிள்ளையாரின் கருணையால் உயிர் பிழைத்து விட்டார். அவர் தற்போது வெளிநாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். என்ன அதிசயம்.
|
|
| |
|
இவ்வாறாக தன்னுடைய பக்தர்களை உயரவைக்கும் சம்பந்தப்பிள்ளையார் தன்னுடைய ஆலய வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டதாக தெரியவில்லை. அதாவது ஆலயம் சிறிதாக இருப்பது குறித்து கவலை கொண்ட மக்கள் அதை சற்று பெரிதாக்க எவ்வளவு முற்ச்சி எடுத்தாலும் அதை தடுத்து நிறுதிதிவிட்டு அவர்களின் வாழ்க்கையை மட்டும் உயர்திக்கொண்டிருக்கிறார்.
|
|
| |
|
கடந்த காலங்களில் புனருத்தாரணம் செய்யவென ஆலயத்தை பாலஸ்தாபனம் செய்தார்கள். ஆனால் இடப்பெயர்வு குறுக்கிட்டது. அதன் பின் மீண்டும் புதுப்பிக்க சுற்றுபிரகார கொட்டகைகள் போட திட்டம் போட்டப்பட்டன. ஆனால் அதவும் யுத்த சூழ்நிலைகளால் பாதியிலே நிறுத்தப்பட்டன.அதன் பின் ஆதிமூர்த்திக்கு பெரிதாக கோவில் கட்ட எண்ணி கட்டட வேலைகள் நடந்தன ஆனால் நிஷாப்புயல் காரணமாக மரம் முறிந்து விழுந்து கட்டங்கள் சின்னாபின்னம் ஆகிய. தான் சிறுமையாக இருந்து மக்களுக்கு பெருமைகளை வழங்குகின்ற ஆடம்பர மற்ற அந்த விநாயகரை மக்களாகிய நாம் மக்களாகிய நாம் கைவிட முடியுமா? ஆவரின் ஆலய முன்னேற்றத்துக்கு எம்மால் இயன்றளவு வழங்குவோம். விநாயகர் அருள்பெறுவோம். நாம் இறைவனின் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க அவர் எம்முடைய பணிகளை அவரே இலகுவில் ஆற்றித் தருவார்.
|
|
| |
|
சுபம் |
|