இவ்வாலயம் தோன்றிய வரலாறு மிகவும் அற்புதமானது. அதாவது அந்த நாட்களில் தென்னை பனை உட்பட பல்வேறு மரங்கள் சோலையாக இருந்தவிடத்து ஓர் மரம் அபூர்வமாக இருந்தது. அதாவது அது ஐந்து வகை மரங்களும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்திருந்தது. அதாவது ஆலமரம், இத்தி மரம், அரச மரம், வேம்பமரம், பனை ஆகியவையே அவை. அதன் கீழ் ஓர் வெள்ளைப் பளிங்குக் கல்லையும் வைரவர் சூலத்தையும் வைத்து சிறிய தாவாரம் அமைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அவ்விடம் ரம்மியமாகவும் அமைதியாகவும் இருந்தது. அதிலே சிறிய பூசைகள், பொங்கல்கள் என்பன நடைபெற்று வந்தன. இந்த நிலம் மானிப்பாயைச் சேர்ந்த திரு.பாலபிள்ளை என்பவருக்கு சொந்தமாக இருந்தது.
 
   
இவ்வாறிருக்கையில் ஒருநாள் மானிப்பாயைச் சேர்ந்த பெரும் பிரமுகரான திரு. சம்மந்தமூர்த்தி அவர்கள் அவ்விடத்துக்கு வந்து வழிபட்டுக் கொண்டு இருந்த வேளை அந்த ஐவகை மரத்திலிருந்து ஓர் ஒளி தோன்றி மறைந்தது. அவருக்கு அது பெரும் அதிசயமாக இருந்தது. அவர் வீடு சென்று உணவருந்தி உறங்கிக் கொண்டிருக்கும் போது விநாயகப் பெருமான் கனவில் தோன்றி நான் இருக்க இடமில்லாமல் ஆதரவின்றி இருக்கிறேன். அந்த ஐவகை மரத்தின் கீழ் என்னை வைத்து ஆலயம் அமைப்பாயாக! என்று கூறி மறைந்தார்
 
   
மறுநாள் அவர் கோவிலிடிக்குச் சென்றுபோது ஊர் மக்கள் பலர் ஒன்று சேர்ந்து இந்த இடத்தில் ஒரு விநாயகர் ஆலயம் அமைத்து தருமாறு கேட்டவும் அவர் கண்ட கனவும் பொருந்தியதாக இருந்ததால் அவர் அதற்கு செவிசாய்த்தார்.
 
   
உடனே அக்காணியை திரு.பாலபிள்ளை என்பவரிடமிருந்து வாங்கி மூலஸ்தானமும் முன்மண்டபமும் 21 நாட்களில் கட்டி முடித்து முதன் முதலில் கும்பாபிசேகம் செய்வித்தார். இதனால் தான் இக்கோவிலுக்கு சம்பந்தப்பிள்ளையார் எனபட பெயர் உண்டாயிற்று. ஆரம்பத்தில் நித்திய நைமித்ய பூசைகளை பிரம்மஸ்ரீ. ராமலிங்க ஐயர் அவர்கள் செய்து வந்தார்கள். அத்துடன் அலங்கார உற்சமும் நடைபெற்று வந்தது.
 
   
கும்பாபிசேகம் நடைபெற்றுது. அதுவரை காலமும் அலங்கார உற்சவமாக நடைபெற்ற திருவிழாக்கள் 1978ம் ஆண்டு ஆவணி மாதம் தொட்க்கம் மகோற்சவமாக பரிணமித்தது. முதன் முதலில் கொடியோற்றி மஹேற்சவத்தை ஆரம்பித்து வைத்தவர் ஈழத்தில் புகழ் பூத்த குருக்களுள் ஒருவரான விஸ்வநாதக்குருக்கள் ஆவார். அன்றிலிருந்து வருடந்தோறும் ஆவணி மாததிதில் வுரும் ஷஷ்டி திதியில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து தினங்கள் மஹோற்சவம் நடைபெற்று ஆவணிப் பெர்ணமி திதியில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறுகின்றது.
 
   
   
மேலும் திருமதி வாமதேவி சம்மந்தமூர்த்தி அவர்கள் 1981 ஆண்டு இறைபதம் அடைந்த பின் ஆலயத்தை அவரின் மைத்துனரான திரு. சிவானந்தன் அவர்கள் பொறுப்பேற்றார்கள். அவர் பொறுப்பேற்று சில மாதங்களில் அவரின் மறைவின் பின் அவரின் பாரியாரான திருமதி சொர்ணம் சிவானந்தன் பொறுப்பேற்று நடாத்தி வந்தார்கள். இவர் சூழ்நிலை காரணமாக கொழும்பில் இருந்தபடியே கோவிலை வழிநடாத்தி வேண்டியிருந்தது. அதற்காக 1992ம் ஆண்டு திரு. குணபாலன் அவர்களின் தலைமையில் அறங்காவலர் சபை ஒன்றை உருவாக்கினார்கள். அதே நேரத்தில் அதுவரை நித்திய நைமித்திய பொறுப்புக்களை ஆற்றி வந்த பிரம்மஸ்ரீ தியாகராஜாக் குருக்கள் கொழும்பு செல்ல அவருக்கும்ப் பதிலாக பிரம்மஸ்ரீ கேதீஸ்வரக் குருக்கள் ஐயா அவர்கள் பொறுப்பேற்றார். இவரே தொடர்ச்சியாக தற்பொழுதும் பணியாற்றி வருகிறார்.மேலும் நிர்வாகத்தை செவ்வனே நடாத்திய தலைலராகிய திரு. குணபாலன் அவர்கள் மஹலக்சமி, சந்தான கோபாலர் ஆகிய இரு புதிய பரிவார மூர்த்திகளை அமைப்பித்தார். வாகனங்களையும் செய்வித்தார். பல்வேறு உற்சவங்களும் ஆரம்பிக்கப்பட்டன. ஆலயம் படிப்படியாக முன்னேறத்தொடங்கியது.
 
   
மேலும் பல முன்னேற்றங்களைச் செய்யும் பொருட்டு 1995ம் ஆண்மு புனருத்தாரணம் செய்யவென ஆலயத்தை பாலஸ்தாபனம் செய்வித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக யாழ்ப்பாண இடப்பெயர்வு குறுக்கிட்டது. அந்த இடப்பெயர்விற்குள்ளேயே திரு. குணபாலனும் இறைபதம் அடைந்தார். அதன்பின்பு அறங்காவலர் சபையில் இருந்தவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்ததால் கோயில் நிர்வாகம் சரியான ஒரு ஒழுங்கு முறைக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமாக இருந்து. சில வருடங்கள் இவ்வாறு உருண்டோடின. இது ஆலயத்தின் வளர்ச்சியில் பெரிதும் ரின்னடைவை ஏற்படுத்தியது. 2007 ம் ஆண்மு திருமதி சொர்ணம் சிவாயஸ்ரீனந்தன் அவர்களின் மறைவினை தெதடர்ந்து தற்போது ஆலய பொறுப்பை ஆவர்களுடைய மகனான திரு. பொன்னம்பலமும் அவரது பாரியாரான திருமதி வதனி பொன்னம்பலமும் ஏற்றுள்ளார்கள். நாடடில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இவர்களும் கொழும்பிலிருந்தபடியே பொறுப்புக்களை கவனிக்க வேண்டியிருந்தது.
 
   
மேலும் நாட்டின் அசாராண சூழலினால் திருவிழாக்கள் சாதாரணமாகவே நடைபெற்றன. திருப்பணிகள் வீழ்ச்சி கண்டிருந்தன. பிள்ளையாருக்கு தொண்டு செய்தவர்கள் பெருமளவில் திருப்பணிகள் நாட்டைவிட்டும் ஊரைவிட்டும் வெளியேறிவிட்டனர். பக்தர்களின் வருகை கூட மந்தமாக காணப்பட்டது. பிள்ளையார் அநாதை போல காணப்படடார். கவலை கொண்ட ஊர் மக்கள் அந்நிலை குறித்து பிள்ளையாரிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்தனர்.
 
   
பிரார்த்தனையால் செய்ய முடியாதது ஏதுவுமே இல்லை. பக்தர்களின் பிரார்தனையை செவிசாய்த்த விநாயகப் பெருமான் பெருங் கருணை கொண்டு தற்போது தன்னுடைய வளர்ச்சிக்கு திரு.பொன்னம்பலம், திருமதி வதனி பொன்னம்பலம் அவர்களின் பெரும் கருவியாக்கி ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது இவர்களின் விடாமுயற்சியாலும் ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும் இவ்வாலயம் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது. 2010ம் ஆண்டு புதிய அறங்காவலர் சபையும் இவர்களால் நிறுவப்பட்டுள்ளது.
 
   
இதன் காரணமாக இவ்வாலயம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து பிள்ளையாரின் அருட்கடாட்சம் எல்லாமக்களுக்கும் பரிபாலிக்கவேண்டும் என பிரார்த்தித்து நாம் எல்லோரும் சேர்ந்து. ஆலயத்தினை வளர்க்கப் பாடு படுவோம். விநாயக பெருமானின் பெருங்கருணையைப் பெறுவோம்.
 
   
சுபம்